சாணக்கியர் – மொர்தெகாய்

Just another WordPress site

சாணக்கியர் – மொர்தெகாய்

இந்தியர்களாகிய நாம் இஸ்ரவேலர்கள். இஸ்ரவேல் நாட்டில் நம் முன்னோர்கள் வாழ்ந்த காலங்களை, சங்க காலம் என்று அழைக்கிறோம். மேலும் நம் முன்னோர்கள் கடைபிடித்த மார்க்கத்தை ஆதிமார்க்கம் என்று அழைக்கிறோம். இயேசுவிற்குப் பிறகு இஸ்ரவேல் நாடு ரோமர்களால் அழிக்கப்பட்டு, இரண்டாயிரம் வருடங்களாக மண்மேடாகக் காட்சியளித்தது. எனவேதான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்நாட்டைக் குமரிக் கண்டம் எனவும், இலெமோரியா எனவும், நாவலந்தீவு எனவும் குறிப்பிட்டுத் தேடி வந்தார்கள்.

1948 ஆம் ஆண்டு இஸ்ரவேல் நாடு மீண்டும் உருவானது. உலகமெங்கும் உள்ள யூதர்கள் அழைத்து வரப்பட்டனர். இரண்டாயிரம் வருடங்களாக உலக வரைபடத்தில் இல்லாதிருந்த நாடு மீண்டும் புதிதாக உருவானது. இஸ்ரவேல் நாடு கி.மு. பத்தாம் நூற்றாண்டில் வடக்கு இஸ்ரவேல், தெற்கு யூதேயா என்று இரண்டு பகுதியாகப் பிரிந்திருந்தது. வடக்கு இஸ்ரவேல் நாட்டைச் சேர்ந்த இஸ்ரவேலர்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டில் அசீரிய மன்னனால் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள். அவ்வாறு நாடுகடத்தப்பட்ட வடக்கு இஸ்ரவேலர்கள் ஈரான், ஈராக் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு, ஈரான், ஈராக் பகுதியிலிருந்த பிற இனத்து மக்கள் வடக்கு இஸ்ரவேலில் குடியமர்த்தப்பட்டார்கள். எனவே வடக்கு இஸ்ரவேலர்கள், திரும்ப தங்கள் தேசத்திற்கு திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பின்னர் அசீரியப் பேரரசு முடிவடைந்து பாபிலோனியப் பேரரசு ஆட்சிக்கு வந்தது. அக்காலக் கட்டத்தில் வடக்கு இஸ்ரவேலர்கள், பாரசீக வளைகுடா வழியாகத் தென்னிந்தியாவையும், கைபர்போலன் கணவாய் வழியாக சிந்து சமவெளிப் பகுதிகளிலும், வடஇந்தியாவிலும் குடியமர்ந்தனர். வடக்கு இஸ்ரவேலர்கள் நாடுகடத்தப்பட்டு நூற்றிருபது ஆண்டுகள் கழித்து, தெற்கு யூதேயாவைச் சேர்ந்த யூதர்கள், பாபிலோனிய அரசன் நெபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு ஈராக்கிற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தெற்கு யூதேயாவைச் சேர்ந்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, ஐம்பது ஆண்டுகள் கழித்து பாபிலோனிய சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது. அடுத்ததாக மத்திய ஆசியப்பகுதிகளில் மேதிய பெர்சிய பேரரசு ஆட்சிக்கு வந்தது. பெர்சிய மன்னனான கோரஸ் (சைரஸ்) சிறைபிடிக்கப்பட்ட யூதர்களில் விருப்பமுள்ளவர் தங்கள் நாட்டிற்குச் செல்லலாம்  எனவும், எருசலேமில் உள்ள சாலமோனால் கட்டப்பட்டத் தேவனுடைய ஆலயத்தைப் பழுது பார்க்கவும் ஆணையிட்டான்.

சிறைபிடிக்கப்பட்ட யூதர்களில் பெரும்பாலானோர் எருசலேம் திரும்பவில்லை. ஒரு சிறு கூட்ட மக்கள் மட்டுமே செருபாவேல் என்பவனது தலைமையில் எருசலேம் திரும்பி, தேவாலயத்தைப் பழுதுபார்த்தனர். இக்காலக்கட்டத்தில் மீதமுள்ள யூதர்களும், வடக்கு இஸ்ரவேலர்களும் பெர்சியா முதல் இந்தியா வரை பரவியிருந்தனர். கி.மு. நான்காம் நூற்றாண்டில் இந்தியதேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும், சூசானை தலைநகராகக் கொண்டு அரசாண்ட அகஸ்வேரு என்ற பெர்சிய மன்னன் இருந்தான். அகஸ்வேருவின் பட்டத்து அரசியாக தெற்கு யூதேயாவைச் சேர்ந்த எஸ்தர் இருந்தாள்.

நம் இந்திய வரலாற்றில் அகஸ்வேரு ராஜா சூரியகுப்தர் என்றும், எஸ்தர் அரசி முரா என்றும், அழைக்கப்படுகிறார்கள். அகஸ்வேரு ராஜாவிற்கும் எஸ்தர் அரசிக்கும் பிறந்த அர்த்தசாஷ்டா, சந்திரகுப்த மௌரியர் என்று அழைக்கப்படுகிறார். யூதர்கள் மோரியா தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்கும் விதமாக மோரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். பின்னாட்களில் அது மௌரியர் என்றானது. எஸ்தர் அரசியின் சகோதரர் மொர்தெகாய் இந்திய வரலாற்றில் சாணக்கியர் என்று அழைக்கப்படுகிறார்.

பரிசுத்த வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டு பகுதியில் எஸ்தர் புத்தகத்தில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேதாகமத்தில், வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது முதல், இஸ்ரவேலர்கள் சிறைபிடிக்கப்பட்டு அதில் சிறு கூட்ட யூதர்கள் மட்டும் திரும்பி வந்தது வரை குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது எஸ்தர் புத்தகம் வரை இஸ்ரவேலர்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது. பிறகு மீதமுள்ள வடக்கு இஸ்ரவேலர்களையும், யூதர்களையும், இணைத்து ஒருங்கிணைந்த இந்தியாவை சந்திரகுப்தரும், சாணக்கியரும் உருவாக்கியதில் இருந்து இந்திய வரலாறு தொடங்குகிறது. சந்திரகுப்த மௌரியர் ராஜநீதியையும், நியாயப்பிரமாணத்தையும், மக்களுக்கு உபதேசிக்க கௌடில்யருக்கு (எஸ்றா) கட்டளையிட்டார். இதனடிப்படையில் உருவானதுதான் அர்த்தசாஸ்திரம், நீதிசாஸ்திரம் என்ற இரண்டு நூல்களாகும். இதை குறித்து வேதாகமத்தில் எஸ்றா புத்தகத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

கௌடில்யருடைய தலைமையில் கூடிய மூன்றாவது சங்கத்தில்தான் இஸ்ரவேலருடைய வேதங்கள் ரிக், யஜூர், சாம வேதங்களாகவும், விஷ்ணுவின் பத்து அவதாரங்களாகவும், எருசலேமில் எழுதப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது. இரண்டு சங்க நூல்களும் எருசலேமில் உள்ள சாலமோன் ஆலயத்தில் வைத்து, பிரதான ஆசாரியர்களால் வாசிக்கப்பட்டு வந்தது. இரண்டு சங்கநூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட மூன்றாவது சங்க நூல்கள் மட்டும், நம் கையில் இன்றுவரை உள்ளது. இதை குறித்து எஸ்றா, நெகேமியா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு இஸ்ரவேலர்களுக்குப் பிறகு நூற்றிருபது ஆண்டுகள் கழித்து யூதர்கள் வந்ததால் நேபாள், பீகார், கேரளா மற்றும் தமிழகத்தில் குடியமர்ந்தனர்.

சந்திரகுப்த மோரியர் யூதகுலத்தைச் சார்ந்தவராதலால், யூதர்கள் அதிகமாக வசித்த பீகாரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார். மேலும் யூதகுலத்தைச் சேர்ந்த தாவீதின் வம்சத்தில் உதித்த ஏசாயா என்கிற கௌதம புத்தருக்கு நேபாள் மற்றும் பீகாரில் நினைவு பீடங்களை அமைத்தார். ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய சாணக்கியர் (மொர்தெகாய்), சந்திரகுப்த மோரியர் (அர்தசாஷ்டா), எஸ்தர் (முரா) இவர்களின் வரலாற்று நிகழ்வுகளைப் பரிசுத்த வேதாகமத்திலிருந்தும், புராணங்களிலிருந்தும், வரலாற்று ஆதாரங்களிலிருந்தும் இனிக் காணலாம்.

சாணக்கியர் (மொர்தெகாய்):

காலம்: கி.மு. நான்காம் நூற்றாண்டு.

சாணக்கியரின் வரலாற்றை குறித்து காண்போம். ஒருங்கிணைந்த இந்தியா உருவாக முக்கிய காரணகர்த்தர் சாணக்கியராவார். புராணங்களிலும், இந்திய வரலாற்றிலும், அவரை குறித்து கூறியிருப்பவற்றை காணலாம்.

புராணம்: நந்த வம்சத்து அரசன் தனநந்தன், அவனது அவையில் சாணக்கியர் ஆலோசகராக இருந்தார். ஒரு நாள் தனநந்தன் அரசவைக்கு வரும்போது சாணக்கியர் எழுந்திருக்கவில்லை. எனவே ஆத்திரமுற்ற தனநந்தன் சாணக்கியனை அவமானப்படுத்தி அரசவையை விட்டு வெளியேற்றினான். தன்னை அவமானப்படுத்திய தனநந்தனையும், அவனது வம்சத்தையும், அழித்துவிடுவதாக சாணக்கியன் சபதம் ஏற்றான். காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த பதினாறு வயது சந்திர குப்தனைக் கொண்டு தனநந்தனைப் பழிதீர்த்து மௌரியப் பேரரசை நிறுவியதாக புராண வரலாற்று நிகழ்வு கூறுகிறது.

புராணங்களில் தனநந்தன் “முத்திர ராக்ஷஸன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். அவனுடைய முத்திரை மோதிரம் கொடூரமான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. புராணங்களில், கொடியவர்களை ராட்சஸர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்நிகழ்வை குறித்து பரிசுத்த வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டு பகுதியிலுள்ள எஸ்தர் புத்தகத்திலிருந்து விரிவாகக் காண்போம்.

பரிசுத்த வேதாகமம் எஸ்தர் 1: இந்துதேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்கும் உள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட மேதிய பெர்சிய மன்னனான அகஸ்வேரு (சூரியகுப்தர்), தன்னுடைய தேசத்தில் இருந்த நாடுகளின் அதிபதிகளுக்கும், மகத்தானவர்களுக்கும், பிரபுக்களுக்கும் விருந்தளித்தான்.

நூற்றெண்பது நாட்கள் அளித்த விருந்தின் முடிவில் ஏழுநாட்கள் சமஸ்த ஜனங்களுக்கும், விருந்தளித்தான். பட்டத்து அரசியான வஸ்தியும் அரண்மணையிலே பெண்களுக்கு, விருந்தளித்தாள். விருந்தின் ஏழாவது நாளில் ராஜா மகாரூபவதியாயிருந்த வஸ்தியை, பிரபுக்களுக்கும், ஜனங்களுக்கும் காண்பிக்கும்படி ராஜகிரீடம் தரிக்கப்பட்டு அழைத்து வரும்படி தன்னுடைய பிரதானிகளுக்குக் கட்டளையிட்டான். ஆனாலும், ராஜாவின் கட்டளைக்கு வஸ்தி வரமறுத்தாள். எனவே ராஜா பண்டிதர்களிடம் ஆலோசித்தான்.

அதற்கு பண்டிதர்கள் மற்றும் பிரபுக்கள் கூறியதாவது, “ராஜா அழைத்து வஸ்தி வரமாட்டேன் என்று சொன்னது நாட்டில் உள்ள ஸ்திரீகளுக்குத் தெரிந்தால் அவர்களும் தங்கள் புருஷரை அற்பமாக எண்ணுவார்கள். எனவே ராஜா சம்மதித்தால் வஸ்தியை ராஜாவிற்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை, அவளைப்பார்க்கிலும் உத்தமியான ஒருத்திக்கு ராஜா கொடுப்பாராக என்றும், ராஜ கட்டளை பிறந்து மீறப்படாதபடிக்கு உரிய தேசச்சட்டத்தில் எழுதப்பட வேண்டும், “என்றும் ஆலோசனைக் கூறினார்கள்.

மேலும் நூற்றிருபத்தேழு நாடுகளிலிருந்து கன்னிகைகள் கொண்டுவரப்பட்டு, கன்னிகை மாடத்திலே சுத்திகரிக்கப்பட்டு, நாளொருவர் அனுப்பப்படுவார்கள் என்றும், அவர்களில் ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி, பட்டத்து அரசியாக வேண்டும் என்பதே அவர்களது ஆலோசனையாயிருந்தது. அக்காலத்திலே அகஸ்வேரு (சூரியகுப்தர்) அரண்மனையிலே, இஸ்ரவேல் நாட்டைச் சேர்ந்த பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த மொர்தெகாய் (சாணக்கியன்) இருந்தான். அவனது சிறிய தகப்பனின் குமாரத்தியாகிய எஸ்தரை (முரா) தன் குமாரத்தியாக வளர்த்தான். எஸ்தருக்கு (முரா) தாய்தந்தை இல்லாததால், மொர்தெகாய் தன்னுடைய மகளாக எஸ்தரை எண்ணினான்.

சூசான் அரண்மனைக்கு எல்லா நாடுகளிலிருந்து கன்னிப்பெண்களைக் கொண்டு செல்கையில், எஸ்தரும் அவர்களோடு கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டாள். எஸ்தர், ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிற முறை வந்தபோது, ராஜா சகல ஸ்திரீகளைக் காட்டிலும் எஸ்தர் மேல் அன்பு வைத்தான். ஆகையால் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து அவளை வஸ்தியின் ஸ்தானத்தில், பட்டத்து ராணியாக்கினான். எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்தபடி, தனது பூர்வோத்திரத்தையும், குலத்தையும் தெரிவிக்காதிருந்தாள். மேலும் சிறுவயதில் மொர்தெகாயின் சொற்படி நடந்ததுபோல, இப்போதும் சொற்படி கேட்டு நடந்தாள்.

அந்நாட்களில் மொர்தெகாய் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருந்தபோது, ராஜாவின் வாசல்காக்கிற இரண்டு பிரதானிகள், அகஸ்வேரு (சூரியகுப்தர்) ராஜாவைக் கொல்ல வழிதேடினார்கள். இந்தக்காரியம் மொர்தெகாய்க்கு தெரியவந்ததால், அதை ராஜாத்தியாகிய எஸ்தருக்கு (முரா) அறிவித்தான். எஸ்தர் மொர்தெகாயின் பெயரால் அதை ராஜாவிற்கு சொன்னாள். அந்த காரியம் விசாரிக்கப்பட்ட போது, அது மெய்யென்று காணப்பட்டு, அவர்கள் இருவரும் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள். இது ராஜ சமுகத்திலே, நாளாகம புஸ்தகத்தில் எழுதப்பட்டது.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, ராஜாவாகிய அகஸ்வேரு ஆகாகியனாகிய ஆமான் (தனநந்தன்) என்பவனை மேன்மைப்படுத்தி, எல்லாப் பிரபுக்களுக்கும் மேலாக உயர்த்திவைத்தான். ஆகையால் அரண்மனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும், ஆமான் (தனநந்தன்) தங்களைக் கடந்து செல்லும்போது, எழுந்து வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள். அவனுக்கு இப்படி செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.

ஆனால் மொர்தெகாய் (சாணக்கியன்), ஆமானை (தனநந்தன்) எழுந்து வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை. அதைக்கண்ட ராஜாவின் ஊழியக்கார்கள், “நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறதென்ன?,” என்று கேட்டார்கள். அதற்கு அவன் தான் ஒரு யூதன் என்றுகூறி அவர்களுடைய வார்த்தைக்குச் செவிகொடுக்கவில்லை. இதை அவர்கள் ஆமானுக்கு (தனநந்தன்) தெரிவித்தார்கள். ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான். ஆனாலும் மொர்தெகாயை (சாணக்கியன்) மட்டும் கொல்வது அவனுக்கு அற்பகாரியமாகப்பட்டது. எனவே அவன் ஜனமாகிய யூதரையெல்லாம் கொல்ல வகைத் தேடினான்.

அகஸ்வேருவின் பன்னிரண்டாம் வருடத்திலே ஆமான், அகஸ்வேரு ராஜாவை நோக்கி, “உம்முடைய ராஜ்ஜியத்திலே சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டுக்கிடக்கிறார்கள். அவர்கள் ராஜாவின் சட்டங்களையும், கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதில்லை. இப்படி அவர்களை விடுவது ராஜாவிற்கு நியாயமில்லை. எனவே நீங்கள் சம்மதித்தால் அவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்று எழுதி அனுப்புங்கள். அப்போது நான் ராஜாவின் கஜானாவிலே பதினாயிரம் தாலந்து வெள்ளியைக் கொண்டு வந்து சேர்ப்பேன்,” என்றான்.

அப்பொழுது ராஜா தன் கையிலிருக்கிற தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனாகிய ஆமானிடத்தில் கொடுத்து, ஆமானை நோக்கி, “அந்த வெள்ளியை நீயே வைத்துக்கொள். அந்த ஜனத்திற்கு உன் இஷ்டப்படி செய்யலாம்,” என்றார். ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டு ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின் மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த நாட்டில் ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது. ராஜாவாகிய அகஸ்வேருவின் பெயரால் எழுதப்பட்டு, ராஜாவின் முத்திரை மோதிரத்தால் முத்திரைப் போடப்பட்டது.

ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் தேதியாகிய ஒரேநாளில் சிறியோர், பெரியோர், குழந்தைகள், பெண்கள், உட்பட சகல யூதர்களையும், அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்களைக் கொள்ளையிடவும், அஞ்சற்காரர் கையிலே, ராஜாவின் நூற்றிருபத்தேழு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டது. அந்த கட்டளைகளுக்குப் பின் ராஜாவும், ஆமானும் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள். சூசான் நகரம் கலங்கிற்று.

நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து இரட்டுடுத்தி மகா சத்தமாய் அழுதான், ராஜாவின் உத்தரவு நாடுகளுக்குப் போய்ச் சேர்ந்தபோது, ஒவ்வொரு நாட்டிலும் இருந்த யூதருக்குள் மகா துக்கமும், உபவாசமும், புலம்பலும், அழுகையும் உண்டாகி, அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள்.

அப்போது மொர்தெகாய், அத்தாகு என்பவனிடம் யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடத்தில் கொடுத்து, அதை எஸ்தரிடம் தெரியப்படுத்தவும், அவள் உடனடியாக ராஜாவினிடத்தில் சென்று அவனிடத்தில் தன் ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணவும், மன்றாடவும் வேண்டும் என்றும், அவளுக்குச் சொல்லச் சொன்னான். அப்போது எஸ்தர் மொர்தெகாயிற்கு சொல்லி அனுப்பியது யாதெனில் யாராவது அழைக்கப்படாமல் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால் பெண்களானாலும், ஆண்களானாலும் அவர்கள் பிழைக்கும்படி ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றபடி சாகவேண்டும் என்றாள்.

அதற்கு மொர்தெகாய் மறுமொழியாக, “நீ இந்த காலத்தில் மௌனமாயிருந்தால், யூதருக்கு இரட்சிப்பும், சகாயமும் வேறிடத்தில் வரும்,” என்று கூறினான். எஸ்தர் மறுமொழியாக, “நீர் போய் சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து மூன்று நாள் அல்லும் பகலும் அப்பம் புசியாமலும், குடியாமலும் இருந்து எனக்காக உபவாசம் பண்ணுங்கள். நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுகிறோம். இவ்விதமாய்ச் சட்டத்தை மீறி ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன். நான் செத்தாலும் சாகிறேன்,” என்று கூறினாள்.

மூன்றாம் நாளிலே எஸ்தர், ராஜ வஸ்திரம் தரித்துக்கொண்டு, ராஜா ராஜாசனத்தில் வீற்றிருந்தபோது ராஜாவிற்கு எதிராக வந்து நின்றாள். எஸ்தருக்கு ராஜாவின் கண்களில் தயை கிடைத்ததால் பொற்செங்கோலை எஸ்தரிடம் நீட்டினான். ராஜா எஸ்தரை நோக்கி, “நீ கேட்கிற மன்றாட்டு என்ன? உனக்கு என்ன வேண்டும்? நீ ராஜ்ஜியத்தில் பாதி மட்டும் கேட்டாலும் உனக்குக் கொடுக்கப்படும்,” என்றார். அப்போது எஸ்தர், “ராஜாவிற்கு சித்தமானால் நான் தமக்கு செய்வித்த விருந்துக்கு ராஜாவும், ஆமானும் இன்றைக்கு வரவேண்டும்,” என்றாள்.

எஸ்தர் செய்த விருந்துக்கு ராஜாவும், ஆமானும் வந்தார்கள். ராஜா எஸ்தரை நோக்கி, “நீ கேட்கிற மன்றாட்டு என்ன? உனக்கு என்ன வேண்டும்? நீ ராஜ்ஜியத்தில் பாதி மட்டும் கேட்டாலும் உனக்குக் கொடுக்கப்படும்,” என்றார். எஸ்தர் ராஜாவினிடத்தில், “ராஜாவின் கண்களில் கிருபை கிடைத்தால், என் வேண்டுதல்களையும், விண்ணப்பத்தையும் கேட்க ராஜாவிற்கு சித்தமானால் ராஜாவும், ஆமானும் நான் இன்னும் தங்களுக்கு செய்யப்போகிற விருந்துக்கு வரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் விண்ணப்பமுமாயிருக்கிறது. நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன்,” என்றாள்.

ஆமான் சந்தோஷத்துடனும், மன மகிழ்ச்சியுடனும், அரண்மனையை விட்டு கிளம்பும்போது, மொர்தெகாய் தன்முன் எழுந்திருக்காமலும், அசையாமலும் இருந்ததைக் கண்டபோது, மொர்தெகாயின் மேல் ஆமான் மேன்மேலும் உக்கிரமானான். ஆமானது மனைவியும், சிநேகிதரும் அவனிடத்தில், “ஐம்பது முழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்பட்டு, அதிலே மொர்தெகாயைத் தூக்கில் போடும்படி நாளையதினம் ராஜாவினிடத்தில் கூறவேண்டும், பின்பு சந்தோஷமாய் ராஜாவினிடத்தில் விருந்துக்குப் போகலாம்,” என்றார்கள்.

அன்றைய இராத்திரியிலே ராஜாவிற்கு உறக்கம் வராதபடியால், நாளாகம புத்தகத்தை வாசித்தான். அப்பொழுது அதில் வாசல் காவலாளிகள் ராஜாவைக் கொல்லப் பார்த்ததும், அச்சம்பவம் மொர்தெகாயினால் அது ராஜாவிற்கு தெரிவிக்கப்பட்டதும், எழுதியிருந்ததும் வாசிக்கப்பட்டது. எனவே இந்நிகழ்விற்கு ராஜா மொர்தெகாயிற்கு கணமும், மரியாதையும் செய்ய விரும்பினான்.

அப்போது ஆமான், மொர்தெகாயை தூக்கு மரத்திலே தூக்கில் போட ராஜாவினிடத்தில் பேசுவதற்காக, அரண்மனை வெளிமுற்றத்திலே காத்திருந்தான். ராஜா ஆமானிடம், “ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுசனுக்கு என்ன செய்யப்பட வேண்டும்,” என்று கேட்டான். அதற்கு ஆமான் என்னையன்றி ராஜா யாரை கனம் பண்ண விரும்புவார் என்று, மனதில் நினைத்து ராஜாவை நோக்கி, “ராஜா உடுத்திக் கொள்கிற ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படுகிற ராஜ முடியும், ராஜாவின் பிரதான பிரபுக்களில் ஒருவனிடத்தில் கொடுக்கப்பட்டு, ராஜா கனம்பண்ணப்படுகிற மனுஷன் அலங்கரிக்கப்பட்டு, அவனை குதிரையில் ஏற்றி நகரவீதிகளில் வலம் வரச்செய்து, ராஜா கனம்பண்ணுகிற மனுசனுக்கு இவ்வாறெல்லாம் செய்யப்படும் என்று கூறவேண்டும்,” என்று கூறினான்.

அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: “சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரண்மனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு, அந்த பிரகாரம் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார்,” என்றான். ராஜா கூறியபடியெல்லாம் ஆமான் மொர்தெகாய்க்குச் செய்து முடித்த பின்பு, அவமானத்தின் மிகுதியால் முக்காடிட்டுக் கொண்டான். அவனைப் பார்த்து அவன் மனைவி, “மொர்தெகாய் யூதகுலமானால் நீ அவனை மேற்கொள்ள முடியாமல் தாழ்ந்து போவது நிச்சயம்,” என்றாள்.

அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் பிரதானிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்துக்குவர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள். ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது, இரண்டாம் நாள் விருந்தில் திராட்சைரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி, “எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும்,” என்றான்.

அப்பொழுது ராஜாத்தியாகிய எஸ்தர் பிரதியுத்தரமாக, “ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக. எங்களை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும்படி, நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்; அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாயிருப்பேன்; இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம் பண்ணமுடியாது,” என்றாள்.

அப்பொழுது ராஜாவாகிய அகஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி, “இப்படிச்செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே?” என்றான். அதற்கு எஸ்தர், “சத்துருவும் பகைவனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான்,” என்றாள். அப்பொழுது ராஜாவுக்கும், ராஜாத்திக்கும், முன்பாக ஆமான் திகிலடைந்தான். ராஜா உக்கிரத்தோடே திராட்சைரசப் பந்தியை விட்டெழுந்து, அரண்மனைத் தோட்டத்திற்குப் போனான்.

ராஜாவினால் தனக்குப் பொல்லாப்பு நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராஜாத்தியாகிய எஸ்தரிடத்தில் தன் பிராணனுக்காக விண்ணப்பம்பண்ண எழுந்து நின்றான். ராஜா அரண்மனைத் தோட்டத்திலிருந்து திராட்சைரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா, “நான் அரண்மனையில் இருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டும் என்றிருக்கிறானோ,” என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்.

அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா என்னும் ஒருவன், “இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு, ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின் வீட்டண்டை நாட்டப்பட்டிருக்கிறது,” என்றான்; அப்பொழுது ராஜா, “அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள்,” என்றான். அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு, ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில், ஆமானையே தூக்கிப்போட்டார்கள்.

அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.     அன்றையதினம் அகஸ்வேரு ராஜா, யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை, ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜசமுகத்தில் வந்தான். ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை, ஆமானின் அரண்மனைக்கு அதிகாரியாக வைத்தாள்.

பின்னும் எஸ்தர் ராஜசமுகத்தில் பேசி, அவன் பாதங்களில் விழுந்து அழுது, ஆகாகியனான ஆமானின் தீவினையையும், அவன் யூதருக்கு விரோதஞ்செய்ய யோசித்த யோசனையையும், பரிகரிக்க அவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினாள். அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான்; எஸ்தர் எழுந்திருந்து ராஜசமுகத்தில் நின்று, “ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைக்கிடைத்து, ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும், என்று ஆமான் தீவினையாய் எழுதின கட்டளைகள், செல்லாமற்போகப் பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும். என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும்?,” என்றாள்.

அப்பொழுது அகஸ்வேரு ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி, “இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்கு கொடுத்தேன்; அவன் யூதர்மேல் தன் கையைப் போட எத்தனித்தபடியினால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள். இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைப் போடுங்கள், ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைப்போடப்பட்டதைச் செல்லாமற்போகப்பண்ண ஒருவராலும் கூடாது,” என்றான். நூற்றிருபத்தேழு தேசத்தில் உள்ள அதிபதிகளுக்கும், ஜனத்தின் பிரபுக்களுக்கும், ராஜா அகஸ்வேருவின் பெயரால் கட்டளைகள் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைப் போடப்பட்டு அஞ்சற்காரர் மூலம் அனுப்பப்பட்டது.

அவைகளில், அகஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் தேதியாகிய அந்த ஒரே நாளிலே, அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பகைவருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்க வேண்டுமென்று எழுதியிருந்தது. ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, யூதரின் பகைவர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைவரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது. சூசான் அரண்மனையிலே பதினான்காம் தேதியும் பகைவர்கள் கொல்லப்பட்டார்கள். ஒருவரும் யூதருக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது. நாடுகளின் சகல அதிகாரிகளும் யூதர்களுக்குத் துணை நின்றனர்.

 

9 Responses

 1. Hi! I know this is kinda off topic but I’d figured I’d ask.
  Would you be interested in exchanging links
  or maybe guest writing a blog article or vice-versa?

  My site addresses a lot of the same subjects as yours and I
  think we could greatly benefit from each other.
  If you happen to be interested feel free to send me an email.

  I look forward to hearing from you! Awesome blog by the way!

 2. Hi there, I enjoy reading through your post. I wanted to write a little comment to support
  you.

  Feel free to surf to my blog … best cbd for sleep

 3. Hey I am so thrilled I found your blog, I really
  found you by error, while I was browsing on Yahoo for something else, Anyhow I
  am here now and would just like to say thanks
  for a fantastic post and a all round thrilling blog (I also love the
  theme/design), I don’t have time to read it all at the moment but
  I have saved it and also included your RSS feeds, so when I have time
  I will be back to read more, Please do keep up the excellent work.

 4. Hello there, just became aware of your blog through Google,
  and found that it is really informative. I’m going to watch out
  for brussels. I will be grateful if you continue this in future.
  Numerous people will be benefited from your writing.
  Cheers!

 5. Do you have any video of that? I’d care to find out some additional information.

  Feel free to visit my web page :: CBD gummies for sale

 6. cbd gummies says:

  Thanks for sharing your thoughts. I truly appreciate your efforts and I will be waiting
  for your next write ups thanks once again.

  Feel free to surf to my web-site cbd gummies

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *