குமரிக்கண்டம்

Just another WordPress site

குமரிக்கண்டம்

குமரிக்கண்டம் என்னும் சொல் முதன்முதலில் கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முருகனது பெயர் குமரவேல் பாண்டியன் என்பதாகும். முருகனது பெயராலேயே குமரநாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. குமரநாட்டில் பிராமணர்கள் வசித்ததாகவும், சிவனை வழிபட்டு வேதங்கள் ஓதியதாகவும், இப்பேரரசு தவிர மற்ற பேரரசில் வாழ்ந்தவர்கள் மிலேச்சர்கள் என்றும், மேலும் இப்பேரரசை தனது மகன்களுக்குப் பிரித்து கொடுத்ததாகவும் கந்தப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதை குறித்து பரிசுத்த வேதாகமத்தில் இருந்து காணலாம்.

 இஸ்ரவேல் நாட்டின் கோத்திரத்தலைவன் இஸ்ரவேலன். இஸ்ரவேலனுக்கு பன்னிரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். பன்னிரண்டு குமாரர்களுக்கு இந்நாடு பிரித்து கொடுக்கப்பட்டது. நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையும் தேவன் மோசே மூலமாக இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்தார். இதுவே யூதர்களின் வேதமான “தோரா” என்று அழைக்கப்படுகிறது.

எல்லைகள்:

வைசம்பாயனார் தன்னுடைய நூலில் குமரநாட்டின் அமைவிடத்தை குறித்து விளக்குகிறார்.

“பெருமலை ஒருபுறத்தே திருமலை மறுபுறத்தே

பெருங்கடல் ஒருபுறத்தே இருங்கடல் மறுபுறத்தே

திருவுறச் சூழ்ந்ததாலே செழுவளம் கெழுமிச்சூழ

ஒருபெரும் கன்னிநாடு குமரிநாடென உரைத்தார்”

                                                                                                                   வைசம்பாயனார்-64

இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள திருமலை சீனாய்மலையாகும் தேவன் மோசேக்கு இங்குதான் வேதத்தை அருளினார். மறுபுறம் உள்ள பெருமலை லெபனான் மலைத்தொடர் ஆகும். பெருங்கடல் என்பது மத்தியதரைகடலும், மறுபுறம் உள்ள இருங்கடல் என்பது சாக்கடலும், கலிலேயா கடலும் ஆகும். இஸ்ரவேல் நாட்டின் எல்லைகள் இவைகளே.

சிலப்பதிகாரம் “தொடியோள் பௌவம்” குறிக்கும் நிலப்பகுதிகள்;

ஏழ் தெங்கநாடு,

ஏழ் மதுரை நாடு,

ஏழ் குணகாரை நாடு,

ஏழ் குன்ற நாடு,

ஏழ் முன்பாலை நாடு,

ஏழ் பின்பாலை நாடு,

ஏழ் குறும்பனை நாடு

என்ற ஏழு “ஏழ்” நாடுகளைக் குறிக்கிறது. “ஏழ்” என்பது இஸ்ரவேல் நாட்டைக் குறிக்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள முன் பாலையும், பின்பாலையும் இஸ்ரவேல் நாட்டில்தான் அமைந்துள்ளது. மேலும் “ஏழ்” என்ற சொல் எபிரேயத்தில் கடவுளைக் குறிக்கும் சொல் ஆகும். “ஏல்” என்பது அரபு மொழியில் “அல்” என்றும், தமிழ் மொழியில் “வேல்” என்றும் மருவியிருப்பதைக் காணலாம்.

வடவேங்கடம்தென்குமரி:

தொல்காப்பியம் மற்றும் நன்னூலில், குமரி கண்டத்தில் இருநில ஆட்சி இருந்ததை குறித்து கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியம் சிறப்பு பாயிரவரி “வடவேங்கடம், தென்குமரி” என்ற இருநாட்டைக் குறிப்பிடுகிறது. மகாபாரதத்தில் இந்நாடு துவாரகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கபிலர் தன் நூலில் துவரை, வேட்துவாரகை என்ற இருபெரும் நகரங்கள் இருந்ததாகவும் கழாத்தலை என்ற முனிவரின் சாபத்தால் இருநகரங்களும் அழிந்ததாகவும் கூறுகிறார். தென்குமரியின் கடவுளாக, வேங்கடத்தின் அதிபதியான வேங்கடாசலபதி அறியப்படுகிறார். இதை குறித்து பரிசுத்த வேதாகமத்தில் இருந்து காணலாம்.

இஸ்ரவேல் நாடானது வடக்கு இஸ்ரவேல், மற்றும் தெற்கு யூதேயா என்ற இரு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இஸ்ரவேல் நாட்டின் கோத்திரத் தலைவன் இஸ்ரவேலன்தான், தென் குமரியின் அதிபதியாக குமரனாகவும், வடவேங்கடத்தின் அதிபதியாக வேங்கடாசலபதியாகவும் திகழ்கிறார். இம்மூவரின் வாழ்விலும் ஒரே மாதிரியான நிகழ்வுகள் நடந்திருப்பதை குறித்து பிற்பகுதியில் விரிவாக காணலாம். மேலும் இரண்டு நாடுகளும் இரண்டாயிரம் ஆண்டுகளாக மண்மேடாக இருந்ததை குறித்து வரலாற்றில் இருந்து அறிந்துக் கொள்ளலாம்.

இறையனார் அகப்பொருள் உரையில் மூன்று சங்கங்கள் இருந்தது பற்றியும், அவையில் இருந்த புலவர்களின் பெயர்களை குறித்தும் விரிவாக கூறப்பட்டுள்ளது.

பரிசுத்த வேதாகமம்: சங்கம் என்ற சொல்லை சபை என்றும் கூறுவர். வேதாகமத்தில் முதல் சபையானது மோசே காலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வைத்தான் “மகாபாரதம்” என்ற இதிகாசமாக வடித்துள்ளனர், தமிழில் “அகத்தியம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எபிரேயத்தில் “தோரா” என்று குறிப்பிடுகிறார்கள். மோசேயினால் இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட உபதேசம் “பகவத்கீதை” என்ற பெயரில் இந்துக்களின் வேதமாக உள்ளது.

இரண்டாம் சங்கமானது, சாமுவேல் மற்றும் தாவீது காலத்தில் நடைபெற்றது. தாவீது மற்றும் அவரது மகனாகிய அப்சலோம் வாழ்வில் நடந்த நிகழ்வுகள், இன்று இராமாயணம் என்ற இதிகாசமாக இயற்றப்பட்டுள்ளது. மூன்றாம் சங்கமானது யூதர்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பிறகு எஸ்றா என்ற கௌடில்யர் தலைமையில் நடைபெற்றது. மூன்றாவது சங்கத்தில் இயற்றப்பட்ட நூல்கள் மட்டும் சந்திரகுப்தர் காலத்தில் ஒருங்கிணைந்த இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது.

இலெமோரியா:

இதன் பெயருக்கான விளக்கத்தை இப்போது காணலாம். இலெ+மோரியா என்று பிரித்து பார்க்க வேண்டும். “இலெ” என்ற வார்த்தை அரபு வார்த்தையாகும். இது மிகவும் உயர்வாகக் கருதப்பட்ட யூதராஜாக்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். பென்யமீன் மற்றும் யூதர்களுக்குப் பிரித்து கொடுக்கப்பட்ட நிலப்பரப்பு, அதாவது எருசலேம் ஆலயம் உள்ள பகுதி ஆபிரகாம் காலத்திலே மோரியா தேசம் என்றே அழைக்கப்பட்டது.

 பரிசுத்த வேதாகமம்ஆதியாகமம் 22: தேவன் ஆபிரகாமை சோதிக்க இவ்வாறு கூறினார், “நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்து கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் காட்டும் மலை ஒன்றின்மேல் நீ அவனைத் தகன பலியாகப் பலியிட வேண்டும்,” என்றார்.

                தேவன் கூறிய இடத்தில்தான் பின்னாட்களில் எருசலேம் ஆலயம் கட்டப்பட்டது. இங்குதான் யூதர்கள் ஆட்சி செய்தனர். எனவேதான் யூதப்பெண்ணான எஸ்தரின் வம்சத்தைக் குறிக்கும் பொருட்டு அவரது குமாரனை சந்திரகுப்த மோரியர் என்று அழைத்தனர். அப்பெயரே மௌரியர் என்றானது. இதிலிருந்து “இலெமோரியா” என்பதைத் தெற்கு யூதேயா என்றும், தமிழில் தென் குமரி என்றும் அழைத்தனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நாவலந்தீவு:

நாவலந்தீவு என்பதன் அமைவிடம் தமிழ் அகராதியில் உப்புக் கடலும், உப்புக்கடல் சார்ந்த பகுதியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உப்புக்கடல் என்பது இஸ்ரவேல் நாட்டின் சாக்கடலைக் குறிப்பதாகும். சாக்கடலும் அதைச் சார்ந்த பகுதியையும் யூதர்கள் ஆட்சி செய்தனர். இதை வேதாகமத்தில் தெற்கு யூதேயா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல்கோள்:

சங்ககால நூல்களில் தென்குமரி,  கடல் கோளால் அழிந்துவிட்டது என்று கூறப்பட்டுள்ளது. வேதாகமத்தில் இதை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு இஸ்ரவேலர்கள் நாடுகடத்தப்பட்ட காலத்தில் தெற்கு யூதேயாவை உசியா மன்னன் ஆட்சி செய்தான். அவனுடைய காலத்தில் பூமியதிர்ச்சி நிகழ்ந்தது குறித்து கூறப்பட்டுள்ளது.

பரிசுத்த வேதாகமம் ஆமோஸ் 1; சக்கரியா 14-5: யூதேயாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரன் யெரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டானது குறித்து பரிசுத்த வேதாகமம் ஆமோஸ் புத்தகம் முதல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

கடல் பகுதிக்கு அருகில், பூமியதிர்ச்சி ஏற்பட்டால் கடல்கோள் (சுனாமி) உண்டாகும் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் குறிப்பிட்டுள்ள பூமியதிர்வும், கடல்கோளும் குறித்து ஆய்வு செய்து மிகப்பெரிய நில அதிர்வு நடந்தது உண்மை தான் என்று கண்டறிந்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் பெயர்

2019 இன்டர்நேசனல் ஜியோலஜிஸ்ட் ரிவ்யு 42 –ஆமோஸ் எர்த்குஏக் (2019 International Geologist Review 42- Amos Earthquake) என்ற பெயரில் ஆராய்ந்து வருகின்றனர். இதிலிருந்து இஸ்ரவேல் நாட்டில் மிகப்பெரிய பூமியதிர்வும், கடல் கோளும் ஏற்பட்டதை உறுதிபடுத்தியுள்ளனர். அக்காலக் கட்டத்தில் நாடுகடத்தப்பட்ட வடக்கு இஸ்ரவேலர்கள், தங்கள் நாட்டிற்குத் திரும்பவேயில்லை. இயேசுவின் காலத்திற்குப் பிறகு தெற்கு யூதேயா அழிந்ததைக் கடல்கோளால் அழிந்துவிட்டது என்று கருதி புலவர்கள் அவ்வாறு பாடியுள்ளதை அறிந்து கொள்ளலாம்.